கத்தாரின் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காவத்தமுனை அர்ரஹ்மா விசேட தேவையுடையோர் பாடசாலையில் விளையாட்டு விழா



எச்.எம்.எம்.பர்ஸான்-
த்தார் நாட்டின் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள கத்தார் நலன்புரி அமைப்பின் நிதிப்பங்களிப்போடு இடம்பெற்ற விளையாட்டு விழா இன்று (12) செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடி – காவத்தமுனையிலுள்ள அர்ரஹ்மா விசேட தேவையுடையோர் பாடசாலையில் மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றது.

பாடசாலையின் நிருவாகத் தலைவர் எஸ்.எச்.அரபாத் (ஸஹ்வி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எல்.நெய்னா முகம்மட், மற்றும் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு அப் பாடசாலையில் தியாகத்துக்கு மத்தியில் கடமையாற்றிவரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் நடுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விளையாட்டு நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்தி முடிக்க நிதியுதவி வழங்கிய இலங்கையிலுள்ள கத்தார் நலன்புரி அமைப்பினருக்கும், இதனை வழிநடாத்திய நடுவர் எம்.புகாரி, மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -