கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனைக்கிணங்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்
ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

ளுத்துறை மாவட்ட கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் விரிவான கலந்துரையாடல் இன்று (21) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், அமைச்சின் அதிகாரிகள் களுத்துறை மாவட்டத்தில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களின் அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் கிராமம் மற்றும் கைத்தொழில் பேட்டை உரிமையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று தமது தொழிலில் நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தில் கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை உள்வாங்கி அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட தென்னிலங்கையில் பல மாவட்டங்களில் இவ்வாறன கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன, இந்த வருட இறுதிக்குள் கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார் அத்துடன் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து சேவை செய்வதில் தாம் பெருமிதப்படுவதாகவும், அவர் கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை இனம்கண்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -