கிழக்கு முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
எம்.ஜே.எம்.சஜீத்-கிழக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதியால் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளகௌரவ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பயன்படுத்தி கிழக்கில்நீண்டகாலமாக தீர்வுகாணப்படாமல் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெறகிழக்கு மாகாண மக்கள் மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பில்அமைந்துள்ள கிழக்கு மாகாண முன் பள்ளி பாடசாலைகளில் பணியகத்தில்நடைபெற்ற மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை மாவட்ட அதிகாரிகள்கலந்து கொண்ட விசேட கூட்டத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணஅமைச்சருமான எம் .எஸ் .உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
கடந்த காலங்களில் வட கிழக்கு மாகாண சபைகளுக்கு ஆளுநர்களாகநியமிக்கப்பட்டவர்களில் சிலர் கடுமையான போக்குடன் செயல்பட்டனர்.இதனால் கிழக்கு மாகாண சபைக்கு 13வது திருத்த சட்டத்தின் ஊடாகவழங்கப்பட்ட அதிகாரங்களை கூட செயல்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலமைகிழக்கு மக்களுக்கு ஏற்பட்டது.
எனவே,புதிய ஆளுநர் கௌரவ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவைபயன்படுத்தி கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவேண்டிய அதிகாரங்களைசெயல்படுத்துவதற்கும் கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக சமூகங்கள்மத்தியில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகளை பேச்சுவார்த்தைஊடாக தீர்வுகளைப் பெறவும் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் 3 சமூகங்களும்வாழ்ந்து வருகின்றோம் ஒரு சமூகத்தில் இன்னும் ஒரு சமூகம் தங்கி வாழும்நிலமை உள்ளது. எனவே நாம் இன ஒற்றுமைக்கு இதயசுத்தியுடன் செயல்பட்டுசமூகங்களில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு பேச்சிவார்த்தை ஊடாகதீர்வுகளை காணவேண்டும் .
கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள்என்மீது நம்பிக்கை வைத்து கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விபணியகத்தின் தவிசாளராக என்னை நியமனம் செய்துள்ளார்.அவர் ஆளுநராகஇருக்கும் வரை கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தினைசெயல்திறன் மிக்கதாக மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை நாம் ஆளுநரின்வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ள உள்ளோம்.
இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தனதுகாரியாலயத்திற்கு கல்வி அமைச்சு அதிகாரிகளையும் பாலர் பாடசாலை கல்விபணியகத்தின் அதிகாரிகளையும் அழைத்து பணியகத்தின் செயற்பாடுகள்தொடர்பாக கலந்துரையாடி அன்றே உடனடியாக கிழக்கு பாலர் பாடசாலைஆசிரியர்களுக்கான கொடுப்பணவை ஆயிரம் ரூபாய் அதிகரிப்பினைஉடனடியாக வழங்குமாறு பணிப்புரை வழங்கியதுடன் எதிர்காலத்தில்முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கானஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலை பணியகத்தினால் ஆசிரியர்களுக்கானகொடுப்பனவுடன் ஏனைய செலவுகளும் மாதாந்தம் சுமார் 1 1/2கோடி நிதிவழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இப்படி பணியகத்தின்செயற்பாடுகளுக்கு பெரும் தொகையான நிதியினை பெறவேண்டியுள்ளது.
நமது நாட்டில் ஊவா மாகாணம், மேல் மாகாணம், தென் மாகாணம் ,வடமாகாணங்களில் பாலர் பாடசாலை ஆசிரியருக்களுக்கான கொடுப்பனவுகள்கிழக்கு மாகாண சபையினை விட அதிக தொகை வழங்கப்பட்டு வருகின்றன.ஒரே நாட்டில் ஒரே மாகாணசபை முறைமையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஒரு முறைமையும் ஏனைய மாகாணங்களில் வேறுவிதமான நடைமுறைகளும்நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் அதிகமாக முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர்களுக்கானகொடுப்பனவுகள் வழங்கும் மாகாணங்களுக்கு மிக விரைவில் கிழக்கு மாகாணசபையில் உயர்மட்ட குழு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு முன்பள்ளிபாடசாலை பணியகத்தின் செயற்பாடுகளில் உள்ள சாதக பாதகமானவிடயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள்ஆளுனராக பதவி வகிக்கும் காலத்தினை பயன்படுத்தி கிழக்கு மாகாணமுன்பள்ளி பாடசாலை பணியகத்தின் செயற்பாடுகளை பயன் பெறுவதாகமாற்றுவதற்காக ஏற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மூன்றுமாவட்ட காரியாலயங்களிலும் கடமை புரியும் அதிகாரிகள் அபர்ப்பணிப்போடுசெயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்பணியகத்தின் கடந்தகால நடவடிக்கைகளை மறந்து அதிகாரிகள்அனைவரும் ஒன்றிணைந்து புதிய மன மாற்றத்துடன் அர்ப்பணிப்பானசெயற்பாடுகளை முன்னெடுத்து கிழக்கு மாகாணத்தின் ஆரம்ப கல்விக்கு நாம்சிறந்த பணி புரியவேண்டும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின்கொடுப்பனவுகள் தொடர்பாகவும் பணியகத்தின் அதிகாரிகள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் தொடர்பாகவும் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரிடம் நாங்கள்தெரிவித்துள்ளோம். இவ்விடயங்கள் தொடர்பாக படி படியான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படும்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் அவர்களின்அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விபணியகத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.