மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கும் இடையில் சந்திப்பு

ட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும் ஆளுநர் கலாநிதி எம.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர்கிடையிலான சந்திப்பு இன்று (02.02.2019) காலை மட்டக்களப்பு ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . குறிப்பாக பாடசாலை பிரச்சனை, காணிப்பிரச்சினை ,வைத்தியசாலை பிரச்சனை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநர் இப்பிரச்னைக்கான தீர்வு திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாகும் அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகும் குறிப்பிட்டார்.
சிவில் சமூகம் அமைப்பை சார்ந்தவர்கள் குறிப்பிடும் பொழுது இவ்வாறான தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்துள்ளதை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், மகிழ்ச்சி அடைவதாகும் குறிப்பிட்டார்.

முடியுமான பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் மே மாதம் அளவில் மட்டக்களப்பு சிவில் சமூகத்தை சந்தித்து கலந்துரையாடுவதாக ஆளுநர் உறுதியளித்தார் உறுதியளித்தார்.
இந் நிகழ்வில் வைத்தியர்கள் ,சட்டத்தரணிகள் கல்வியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -