கிண்ணியா நகர சபைக்குட்பட்ட இறைச்சி விற்பனையாளர்களின் நலன் கருதி வருடாந்த விலைமனுக் கோரலின் படி அவர்களின் ஒன்றரை மாத நிலுவையை கழிக்குமாறு கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் இன்று (02) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த ஒன்றரை மாத காலமாக இறைச்சி விற்பனையாளர்கள் தொழிலற்ற நிலையில் வருமானமற்று காணப்பட்டார்கள் .
கால் நடைகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நோய் காரணமாக மாட்டு இறைச்சி மார்க்கட் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள் இதனால் இடைக்கால தடை உத்தரவினை மாகாண கால்நடைகள் திணைக்களம் விடுத்திருந்தது.
தற்போது நேற்று முதலாம் திகதி முதல் மாட்டு இறைச்சி விற்பனை வழமைக்கு திரும்பியுள்ளது இதற்கான அனுமதியினை மாகாண கால்நடைகள் திணைக்களம் அனுமதியினை வழங்கியுள்ளது .
மார்க்கட் உரிமையாளர்கள் தற்போது தங்களது தொழில்களை ஆரம்பித்துள்ள நிலையில் இடைப்பட்ட முன்னைய காலங்களுக்கான விலை மனுக் கோரலில் ஒன்றரை மாத நிலுவையை கழித்து செயற்படுமாறும் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பான விடயங்களை கிண்ணியா நகர சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் நகர சபையின் சபை அமர்வில் பிரேரனை மூலமாக இதனை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.