கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (03) வைத்தியசாலையில் உள்ள கட்டிடமொன்றில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட தலைமையின் கீழ் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
கிண்ணியா தளவைத்தியசாலையில் தற்போது நிலவி வரும் ஆளனிப் பற்றாக்குறை தொடர்பாகவும் கடந்த காலங்களில் டெங்கு நோயினால் 23 உயிர்கள் பழியாக்கப்பட்டன இவ்வாறான விடயங்கள் இனிமேலும் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆளணி பற்றாக் குறை தீர்க்கப்பட்டு வைத்திய அதிகாரிகள் உடனடியாக நியமனம் செய்யப்பட வேண்டும் என கலந்துரையாடலில் பல கோரிக்கைகளை முன்வைத்து துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன் போது தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கான இடப் பற்றாக்குறை தொடர்பாகவும் மேலும் பேசப்பட்டது இதற்கான தீர்வினை முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்கால அபிவிருத்திகளை உரிய அமைச்சுக்களின் உயரதிகாரிகளின் உதவியூடாக வைத்தியசாலைக்கான அபிவிருத்திகளை பெற்றுத் தரவுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.அருள்குமரன்,திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் B.கயல்விழி ,வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உட்பட பலர் பங்கேற்றார்கள்.