ஜக்கிய நாடுகள்(UN) இலங்கைக்கான தன்னா்வ நிலையத்தின் 2018 வீ விருது (National Peace Building Award தேசிய சமாதானத்தினை கட்டி எழுப்பிய விருது) fight Cancer team in Sri Lanka . மற்றும் கதிஜா பவுன்டேசனின் ஸ்தாபகத் தலைவா் எம்.எஸ்.எச் முஹம்மத் அவா்களை ஜக்கிய நாடுகள் தொண்டா் அமைப்பு தெரிபு செய்துள்ளது.அவருக்காக ( 2018 UN - V Award ) வழங்கியது. ஜக்கிய நாடுகள் அமையத்தினதும் இலங்கையின் அரசின் சாா்பாக சமுக வலுவூட்டல் அமைச்சும் - இனைந்து இவ் விருதுகளை ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை வழங்கிவருகின்றது. அந்த வகையில். 2018ஆம் ஆண்டில் நடாத்திய விருதிலேயே ” தேசிய சமாதானத்தினை கட்டிய எழுப்பிய, பெரும்பாண்மைச் சமுகத்தினை இதயங்களை வென்று தேசிய ஒற்றுமையை ஏற்படுத்திய பெருமை ஹாஜி முகம்மதே சாரும்.
இவ் விருது ஜ.நா தொண்டா் அமைப்பு. இலங்கையில் விருது வழங்கலில் முதன் முறையாக முஸ்லிம் ஒருவருக்கு கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும்.. இங்கு குறிப்பிடத்தக்கது..
இந் நிகழ்வு நேற்று 20ம திகதி கொழும்பு நெலும்பொக்குன அரங்கில் ஜக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கா், சமுக வலுவுட்டல் அமைச்சின் அமைச்சா் தயா கமகே தலைமையில் நடைபெற்றது . இவ் விருதுக்காக இலங்கையில் 2018ல் விண்ணப்பித்திருந்த 400 தன்னவா் நிறுவனங்களை உள்நாட்டு பல்கழைகக்கழக பேராசிரியா்கள் மற்றும் ஜக்கிய நாடுகள் தொண்டா் நிறுவனத்தின் பணிப்பாளா்களினால் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் 14 நிறுவனங்கள் மட்டுமே இறுதித் தோ்வுக்கு தெரிபுசெய்யப்படது. அழைக்கப்பட்டிருந்தனா்.அந்த 14 பேர்களுக்கான விருதும் வழங்கப்பட்டு பின்னா் அவா்களுள் ஒருவா் மட்டும் தெரிபு செய்யப்பட்டாா். அவ் விருதும் ” சமாதானத்தினைக் சமுகங்களுக்கிடையே கட்டி எழுப்பிய” விருதும் முகம்மத் ஹாஜிக்கே வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டில் உலகில் தன்னாா்வமிக்க தொண்டா் நிறுவனங்கள் - தமக்கென ஒரு குறிக்கோலையும் இலக்கையும் கொண்டு நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் எவ்வித எதிா்ப்பாா்ப்புகளுமின்றி மனிதபிமானத்துடன் தன்னையே அர்ப்பணித்து அதில் வெற்றியும் கண்டு இந் நாட்டில் வாழும் சகல சமுகங்களின் அன்பையும் வென்றவா், அவர் செய்த கைங்கரியத்தினால் இந்த நாட்டு மக்கள் துண்பப்பட்டோா்கள் நாளாந்தம் நன்மையடையும் போது அந்த கைங்கரியத்திற்கு கைகொடுத்தவரை இனம் கண்டு அவற்றினை ஸ்தாபித்தவா்ரை தன்னாா்வமனிதா் , நல்ல செயல் வீரா், . அந்த வகையில் பைட் கென்சா் அமைப்பின் ஸ்தாபகத் தலைவா் எம்.எஸ்.எச் முஹம்மத் தனது மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டதை உணா்ந்து அவரின் என்ணக்கருவில் உதித்த திட்டம் தான் 25 கோடி ருபா பெருமதியான பெட் ஸ்கனரை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கும் திட்டமாகும். இந்த நோய்க்கு இனம்.மதம். நிறம், வயது, நாடு பிரதேசம் பாராது சகலரும் உதவ முன்வந்தனா்
ஹாஜி முகம்மதுவின் மகன் இந் நோயினால் இழந்தது போன்று இவ் இலங்கையின் புத்திரா்கள் இந் நோயினால் பாதிக்கப்டக் கூடாது. அதற்காக ஒரு பெட் ஸ்கேனா் மெசின் ஒன்றை 25 கோடி ருபாவுக்கு மகரகம கென் சா் வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கும் கனவை 3மாதங்களுக்கு நனவாக்கியவா். இந்தத் திட்டத்தினால் தற்பொழுது சாதாரண ஆயிரக்கணக்கான ஏழை எளிய புற்றுநோய் நோயளி பெட் ஸ்கெனா் பரிசோதனைக்கு அரச செலவில் இலவசமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்யை பெற்று வருகின்றாா்கள் ஆனால் வெளியாா் வைத்தியசாலையில் ஒரு முறை பெட் ஸ்கனேர் பரிசோதனைக்காக 1இலட்சத்து 50 ஆயிரம் செலுத்தல் வேண்டும். ஆனால் மகரகமவில் தற்பொழுது இலவசமாக அந்த உபாய கைங்கரியத்தினால் பல ஏழை எளிய நோயாளிகள் நன்மை அடைந்து வருகின்றனா். . இந்த மனிதபிமான தன்னாா்வ தொண்டா் அமைப்புக்காகவே இந்த நாட்டில் எத்தனையோா் நிறுவனங்கள் , அரசாங்கம் இருந்தும் இந்த திட்டத்தினை முன் வந்து செயதமைக்காக இந்த விருது . பைஎட் கென்சா் ஸ்தாபகா் எம்.எஸ் எச் முஹம்மதுக்கு வழங்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த முஹம்மத் எமது அமைப்பின் முக்கிய நோக்கம் 2025 ல் தெற்காசியாவில் ஒர் சிறந்ததும் சகல வசதிகளையும் கொண்டதொரு வைத்தியசாலையாக மகரகம புற்று நோய் வைத்தியசாலையாக மாற்றுவதே எமது நோக்கம்
மிக விரைவில் 1000 கோடி ருபா பெருமதியான ரேடியோகிராப் மெசினரி வழங்கும் திட்டமாகும் ்இந்த திட்டத்தினை மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தா். அவருடன் நுாற்றுக்கும் மேற்பட்ட உறுப்பிணா்கள் இணைந்து இந்தத் திட்டத்தினை வலுவாக்க கைகொடுத்துள்ளனா். இவ் வைத்தியசாலையில் பல அபிவிருத்திகளை செய்வதே எமது இலக்காகும்.. இந்த இலக்கினை அடைவதற்காக மேலும் எமது உழைப்பு நோக்கங்களை தொடா்ந்தும் முன் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதற்காக இந்த நாட்டில் வாழும் சகல சமுகங்களும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையா்கள் இந்த நோக்கினை வெற்றி கொள்ள கைகொடுத்து உதவும் படியும் அவா் வேண்டிக் கொண்டாா்.