கைதான மாணவர்களின் விடுதலை- சிலரின் அறிக்கைகள் கேவலமாகவே உள்ளன..!

ன்று நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பொலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான குற்றங்களை தாங்கள் செய்ததாக ஒப்புக் கொண்டு ஒவ்வொருவரும் 52000 தண்டப்பணம் கட்டி இப்பொழுது வெளியாகி இருக்கின்றனர்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு தலை குனிந்து வருவதற்காகவா இத்தனை கூப்பாடும்?

குற்றத்தை ஒப்புக் கொண்டு வருவதற்காகவா சஜித் பிரேமதாசவிடம் இந்த அரசியல் தலைவர்கள் பேசினார்கள் என்று சொன்னது??

52000 தண்டம் கட்டி வெளிக்கொணர்வதற்காகவா ஹரீஸ் அவர்களைச் சிறையில் சந்திக்கச் சென்றது?

கவலைப்படாதீர்கள்.குற்றத்தை ஒப்புக் கொண்டு வாருங்கள்,உங்கள் வாழ்க்கை அழியட்டும் என்று சொல்வதற்காகவா இந்த அரசியல்வாதிகள் பந்தாக் காட்டியது??

ஆம்.உங்கள் மதச் சின்னங்களை அவமானப்படுத்திவிட்டோம் முஸ்லிம்கள் நாங்கள். நாங்கள் புகைப்படம் எடுத்தது மாபெரும் தவறு.எங்களை மன்னித்தருளுங்கள் என்று செய்யாத குற்றத்திற்கு நீங்கள் மண்டியிடுவதைப் பார்ப்பதற்காகவா சமுகத்தில் இருக்கும் அத்தனை பைத்தியக்காரர்கள் நாங்கள் குரல் கொடுத்தது??

குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்காகவா சட்டத்தரணிகளை கொழும்பில் இருந்து வரவழைத்தது?

யுவர் ஆனர் ஆம் எனது கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் என்ற ஒரு வார்த்தைக்கு திறமையாக வாதாடி வெற்றி பெறல் என்று பெயர் வைத்தது யார்?

சட்டத்தரணிகளின் வாதத்திறமையால் பிணை வழங்கப்பட்டது என்று பச்சப் பொய்யை எழுதுகிறார்கள். பிணையல்ல.குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப் பணம் கட்டி வெளியே வந்திருக்கிறார்கள்.

அதாவது களவெடுக்காதவன் களவெடுத்தேன் என்று ஒப்புக் கொண்டு வருவதைப் போல,கொலை செய்யாதவன் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்வதைப் போல, மதச்சின்னங்களை அவமானப்படுத்தாதவன் அவமானப்படுத்தினேன் என்று ஒப்புக் கொண்டு குற்றப்பணம் கட்டி வெளியே வருவதில் என்ன பெருமை இருக்கிறது?

இந்த அரசியல்வாதிகளுக்குப் பின்னால் போவது எத்தனை வீண் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த சஜித் பிரமதாச,ஹரிஸ்,ரிஷாட் பதியுதீன்,ரவுப் ஹக்கீம் படம் காட்டித்திரியும் நடிகர்களன்றி வேறில்லை.எந்தக் குற்றமும் செய்யாத இருபது வயது மாணவர்களை வெளிக் கொணர முடியாத அரசியல்வாதிகள்தான் இவர்கள்.

தலைவரின் தலையீட்டால் வெளிவந்தார்கள் மாணவர்கள் என்று அவர்களின் அல்லக்கைகள் எழுதும்போதுதான் இருப்புக் கொள்வதில்லை.

எமது நிலையை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோமோ தெரியாது.


Raazi Muhammeth Jabir
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -