அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பிரதமரின் வழிகாட்டலில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பாடசாலை கல்வி, விளையாட்டை மேம்படுத்த பாரிய செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். வரவு செலவு திட்டத்தின் பெருமளவு நிதி கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “அண்மையை பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் வழங்கபடுகின்றன.
இவ்வாறான பாரிய திட்டமொன்றை முன்னெடுத்தும் நாம் அதற்கு “ரணிலோதய” “அகிலோதய” என பெயர் சூட்டவில்லை கல்வியில் அரசியல் செய்யவேண்டிய அவசியம் எமக்கில்லை. ஆனால் கடந்த அரசின் மூலம் முன்னெடுக்கபட்ட “மஹிந்தோதய” திட்டம் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
கல்வியை போன்று மாணவர்களின் விளையாட்டு ஆற்றலையும் அபிவிருத்தி செய்யவே பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். அதில் ஒரு செயல்திட்டமே விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனமாகும். உங்களை போல் இல்ல விளையாட்டு போட்டியில் திறமையை வெளிப்படுத்தி மாவாட்ட மட்டம், மாகாண மட்டம் என வெற்றிபெற்று இறுதியில் தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களே இன்று விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
பல இழுபறிகளை தொடர்ந்து மார்ச் இறுதி பகுதியில் அல்லது ஏப்ரலில் இந்நியமனம் வழங்கப்படவுள்ளது.
அதுபோன்று இந்நியமனத்துக்காக தெரிவு செய்யபட்டவர்களின் முழுமையான பெயர் பட்டியல் மிக விரைவாக வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகளில் எமது அமைச்சின் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.