ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சொந்த நிதியிலிருந்து விகாரைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகளுக்கு குடிநீர் தாங்கிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
வெலிமடை பிரதேசத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்
நோக்குடன் முதற்கட்டமாக இந்நீர்த்தாங்கிகள் கையளிக்கப்பட்டன.
வெலிமடை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.பாயிஸ், ஏ.நஸார் ஆகியோரின் ஏற்பாட்டில் ரேந்த பொலவில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர் தாங்கிகளை கையளித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதுளை மாவட்ட அமைப்பாளர் வீ.தாஜுதீன், மத்திய குழு உறுப்பினர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சில்மியாபுரம், ரேந்த பொல, குருத்தலாவ பிரதேசங்களிலுள்ள மக்களிடம் சுகாதாரம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -