தரமற்ற தலைக்கவச இறக்குமதியை தடைசெய்ய நடவடிக்கை


ஐ. ஏ. காதிர் கான்-
ரமற்ற தலைக்கவசங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்படும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களினாலேயே ஏற்படுகின்றன. இதன் விளைவாக, உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண்கின்றோம். எனவேதான், இவ்வாறான தலைக்கவசங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா - பண்டாரநாயக்க வித்தியாலயத்தில், வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -