கலை, வர்த்தக பிரிவில் அகில இலங்கை ரீதியாக தொடர்ந்து 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முதலிடம் பெற்றுக் கொண்ட வெல்பொதுவெவ அல் இல்மியா மஹா வித்தியாலயம் கடந்த ஆண்டு தனது பல நாள் கனவான கணித, விஞ்ஞானப் பிரிவுகளை ஆரம்பித்திருந்தது.
இந்த கனவின் பிரதிபலனால் வெற்றிகரமான முறையில் ஓராண்டாக முன்னெடுத்துச் செல்லப்படும் கணித மற்றும் விஞ்ஞான பிரிவிற்கு நேற்றை தினம் ஒரு சிறப்பான நாளாக அமைந்தது.
2019 ஆம் ஆண்டிற்காக புது வரவுகளை வரவேற்கும் விஷேட நிகழ்வு நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் அல் ஹாஜ் எம். எஸ். எஸ் முஸ்தபாவின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக குளோபல் தனியார் நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வி ரியால் கலந்து சிறப்பித்துடன், வலயக் கல்வி பணிப்பாளர் மஹ்ரூப் ஆசிரியர், உதவி கல்வி பணிப்பாளர் மொஹிடீன் ஆசிரியர், கூட்டுறவு ஆணையாளர் மொஹமட் நசீர் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்காக புதிதாக 70 மாணவர்கள் வருகை தந்திருந்தமை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வுகளின் போது அல் இல்மியா மஹா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பூந்தோட்டமும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
பாடசாலையின் பழைய மாணவர்கள், அல் இல்மியா கல்வி முன்னேற்ற கழகம், அல் இல்மியா விஞ்ஞான செயற்திட்ட குழு, பாடசாலை அபிவிருத்து சங்கம் மற்றும் ஊர்வாசிகள் அனைவரது பூரண ஒத்துழைப்புடனும் இந்நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
தேர்ச்சிமிக்க ஆசிரியர் குழாம், மிகச்சிறந்த வழிகாட்டல்களின் ஊடாக இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.