-தலா ஐம்பதாயிரம் ரூபா அன்பளிப்பு வழங்கிவைப்பு-
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிண்ணியாவில் மண் அகழ்வின் போது உயிரிழந்த இருவரது வீடுகளுக்கு கலாநிதி எம் .எல் .எ. எம் ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்து , இரு சகோதர்களின் குடும்பத்திற்கு மாகாண நிதியில் இருந்து தலா ஐம்பது ஆயிரம் ரூபா காசோலை வழங்கிவைத்தார் .இன்று (31.01.2019) விஜயம் செய்த கிழக்கு ஆளுநர் இந்த அன்பளிப்பினை வழங்கிவைத்தார் . இதன் போது இவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் வழங்கினார் .
இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் மண் அகழ்வது , மரங்கள் வெட்டுதல் போன்றவை எங்களது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதறகு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர் . இதற்கு பதிலளித்த கிழக்கு ஆளுநர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் .
இதன் போது கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் , பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.