பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாடசாலைத் தோட்டம் செய்தல் போட்டியில் ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம்.முபாரக் தெரிவித்தார்.
உணவு உற்பத்திகளை மையமாகக் கொண்டு செயற்படுத்திய இத் திட்டத்தில் குறித்த பாடசாலையில் பாடசாலை தோட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதில் வெண்டி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை மையப்படுத்தி தோட்டம் செய்யப்பட்டது. அதில் சிறப்பான அறுவடையும் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்ட எமது உதுமான் வித்தியாலயத்திற்கு பரிசில்கள் கிடைக்கப் பெற்றதாக அதிபர் எம்.பீ.எம்.முபாரக் தெரிவித்தார்.