புனித உம்றா பயணத்தினை மேற்கொண்டு நாடு திரும்பியோரை அழைத்துவரச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று குருநாகல் கொக்கரல எனும் பகுதியில் நேற்று (4) இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியிலுள்ள குடும்பத்தினர் புனித உம்றாக் கடமையினை நிறைவேற்றிவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்துள்ளனர் அவர்களை அழைத்து வருவதற்காக அவர்களது உறவினர்கள் வேன் ஒன்றில் பயணித்துள்ளனர்.
குறித்த வேன் கொக்கரல பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எதிரே காரொன்று அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து வேனை நோக்கி வந்துள்ளது. இதை கண்டு கொண்ட வேன் சாரதி அவ் பாரிய விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக முயற்சித்த போது அருகிலிருந்த மரமொன்றில் வேன் மோதுன்டதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ் விபத்தில் வேனில் பயணித்த இருவர் காயமடைந்தோடு இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.