நேற்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு
இன்றே களத்தில் இறங்கிவிட்டார் பைசல் காசிம்
ஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இன்றே களத்தில் இறங்கிவிட்டார்.நேற்று இடம்பெற்ற ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பைசல் காசிம் ஒலுவில் வைத்தியசாலையில் ஆரம்ப வைத்திய பாரமரிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் 2 மாடி கட்டடம் ஒன்று அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.அதற்கமைவாக இன்றே அந்த வைத்தியசாலைக்குச் சென்று முதற்கட்ட இந்த வேலைத் திட்டங்களை
நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தோடு கலந்துரையாடினார்.
உலக வங்கியின் நிதி உதவியில் இலங்கையில் தொற்ற நோய்யை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சர் டாடக்டர் ராஜித சேனாரத்னாவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமே இந்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனூடாக,வைத்திய ஆய்வுகூடம்,கதிர் இயக்கப் பிரிவு மற்றும் அவற்றுடன் இணைந்ததாக மேலும் பல வைத்திய வசதிகளும் ஒலுவில் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்.
ஒலுவில் மக்கள் சில வைத்திய சேவைகளை பெறுவதற்கு அக்கறைப்பற்றுக்கோ அல்லது கல்முனைக்கோ செல்ல வேண்டியுள்ளது.ஆனால்,மேற்படி வேலைத் திட்டம் முன்னெடுப்பட்டால் ஒலுவில் மக்கள் ஒலுவிலிலேயே வைத்திய சேவையைப் பெறக்கூடியதாக இருக்கும்.
பைசல் காசிமின் இன்று சனிக்கிழமை விஜயத்தின்போது இரண்டு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் இடத்தை பார்வையிட்டதோடு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.அத்தோடு,வைத்தியசாலைக்கு அமைச்சரின் 20 இலட்சம் ரூபாய் செலவில் சுற்று மதில் அமைக்கப்படும் பிரதேசத்தினையும் பார்வையிட்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், ஒலுவில் வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ. பெளமி, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உயர் அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.