ஆளுநர் ஆசாத் சாலியை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எஸ். சுபைர் சந்திப்பு


எஸ்.அஷ்ரப்கான்-
றாவுர் பற்று முஸ்லிம் மக்களுடைய காணி விடயமாக
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான ஆசாத் சாலியை, சிரிலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ். சுபைர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் அமைப்பாளரும் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியின் இணைப்பு செயலாளருமான எச்.எம்.நிஜாம்தீன் ஆகியோர் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடல் நிகழ்வு ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13) புதன்கிழமை இடம் பெற்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 18 பேரின் காணிகளை உடனடியாக வழங்குவதற்கான பணிப்புரையை ஏறாவுர் பற்று பிரதேச செயலாளருக்கு வழங்குமாறு ஆளுநரை இக் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஆளுநர் ஆசாத் சாலி உடனடியாக தொலைபேசியில் குறித்த பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு யுத்ததால் பாதிக்க பட்ட மக்களின் காணியை விடுவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அதற்கு அமைய பிரதேச செயலாளர் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதாகவும் காணிக்குறியவர்களை பிரதேச செயலகத்திற்கு வருமாறும் வேண்டிக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -