புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலைய காரியாலயத்திற்கு முன்பாக பொல்பிட்டிய பிரதேச மக்கள் 50ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.
15.02.2019 அன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.
புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தியினால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களில் 4 குடும்பங்களுக்கு மாத்திரமே நஷ்டஈடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு இன்னும் நஷ்டஈடு தொகை வழங்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பொல்பிட்டிய பகுதியில் வசித்து வந்த மக்கள் மின் உற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பல வருட காலமாக முகங்கொடுத்து வந்துள்ளனர்.
33 குடும்பங்களை சேர்ந்த 50ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அவர்களின் குடியிருப்புகளும் அங்கு வெட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
எமது குடியிருப்புகள் பாதிப்புகளுக்கு புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் வீடுகளை கட்டுவதற்கு நஷ்டஈடுகளை தரும்படி இதன்போது வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இவர்களுடைய போராட்டம் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை தமக்கான நஷ்டஈட்டு தொகையை வழங்கு என ஆக்ரோஷத்துடன் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தமை குறிப்பிடதக்கது