அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
52 நாள் அரசியல் சூழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னனியின் தனி அரசு மூலம் நாட்டு மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். கப்பெரலிய திட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த மாதமளவில் ஆரம்பிக்கப்படும். நாடு முழுவதும் அமைச்சர் சஜித் பிரதமதாசவால் உதாகம்மான வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வரவு செலவு திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். ஆகவே இப்போதே மக்களின் மனதை வெற்றிகொள்ளும் திட்டங்களை எமது அரசு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது என எண்ணுகிறேன்.
இவ்வாறு அரசின் நடவடிக்கைகள் காணப்பட்டாலும் நாட்டில் காணப்பட்ட அரசியல் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. அரசியல் நெருக்கடி நிறைவுக்கு வர வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே எமக்குள்ள ஒரே வழி. புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செயப்பாட்டு அவரின் அதிகாரத்தின் கீழ் மாகான சபை பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படின் மாத்திரமே இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.
மஹிந்த மைத்ரி கூட்டணிக்கு இடையில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையினாலேயே அவர்கள் மாகாணசபை தேர்தலை முதலில் நடத்த கோருகின்றனர். தான்தான் அடுத்த வேட்பாளர் என்ற நோக்கிலேயே ஜனாதிபதி செயற்படுகிறார் இப்போது ஏற்பட்ட நெருக்கடிக்கு இதுவே மூல காரணம்.
அடுத்த பக்கம் ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் யார் வேட்பாளர் என்பதில் போர் மூண்டுள்ளது. கோடபாய, பசிலுக்கு அமெரிக்க பிரஜாஉரிமை காணப்படுவதால் அவர்களுக்கு போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது, சமலை பெரும்பாலானோர் விரும்பவில்லை, மேலும் குமார வெல்கம போன்றவர்கள் வெளிப்படையாகவே ராஜபக்ச சகோதரர்களை எதிர்கின்றனர்.
இவ்வாறு ஜானாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாமலையை அவர்கள் மாகாணசபை பற்றி கதைக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியில் மக்கள் மனதை வென்ற வேட்பாளர் ஒருவர் உள்ளார். ஆகவே அவரின் தலைமையில் எதிர்வரும் அனைத்து தேர்தல்களையும் வெற்றி கொண்டு எமது திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.