மட்டக்களப்பு மாவட்ட அரசியலில் பெரும் மாற்றம்-இணையப்போகும் இரு ஆளுமைகள்

அபூ மபாஸ்-

ட்டக்களப்பு மாவட்ட அரசியலில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்று இடம்பெறவிருக்கிறது என்னும் உண்மை இன்னும் சில மாதங்களில் ஏன் விரைவில் வெளிவரலாம் என்பதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவரின் கருத்துக்களுக்கு கட்சியின் தலைவர் செவிசாய்ப்பதில்லை என்னும் நிலை முன்னரில் இருந்து தெரிவிக்கப் பட்டாலும் அவரை கட்சியின் தலைமை புறக்கணித்து நடப்பதாக நசீர் அஹமதின் ஆதரவாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

அத்துடன் முன்னாள் முதலமைச்சரின் சார்பாக ஏறாவூர் நகர சபையில் போட்டியிட்டு நகர சபைத் தவிசாளராக நியமிக்கப்பட்ட வாஷித் அலி என்பவர் இராஜாங்க அமைச்சர் அலிஷாஹீர் மெளலானாவுடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. 

இப்படியான நிலையில் தனக்கு அதிகாரம் இல்லை என்பதனால் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்துள்ள நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு நேரடி அரசியலில் இறங்குவதற்கு தீர்மாணிப்பதாக அவர் சார்பான ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லா நசீர் அஹமட் இருவரும் சேர்ந்து தேர்தலில் களமிறங்கினால் வேறு எந்த கட்சி சார்பாகவும் முஸ்லீம் பிரதிநிதிகள் வருவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பது அரிதான விடயம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறாகினும் அரசியலில் எது எப்போது யாருடன் நடக்கும் என்று யாராலும் எதிர்வு கூற முடியாத நிலை அரசியலுக்கு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.
பொறுமையுடன் காத்திருப்போம் எது எப்போது நடைபெறுகிறது என்று ஆனால் கருணா போன்ற இனவாதிகளின் ஆதிக்கம் மட்டக்களப்பில் அதிகரித்துள்ள காரணத்தினால் முஸ்லீம் அரசியல்வாதிகள் உசாராகவும் ஒற்றுமையாகவும் செயல்படவேண்டியது இன்றய கட்டாயம் என்பதனைப் புரிந்து கொள்ளல் அனைவருக்கும் நன்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -