பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 24,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் குறித்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இந்த திருத்தம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -