களுத்துறை மாவட்ட, பாணந்துறை, சரிக்கா முல்லைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம், பாணந்துறை மல்சரா மண்டபத்தில் நேற்று வியாழன்(21) மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக் கொண்ட அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறைமுகங்கள், கப்பல்துறை பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார்.
சிறப்பதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன், பாணத்துறை ஜீலான் மத்திய கல்லூரி முன்னாள் அதிபரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்ற விவகார செயலாளருமான, ஏ. ஆர்.எம்.ஜிப்ரி , பேருவளை பிரதேச சபை உறுப்பினர், பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், களுத்துறை நகரசபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் ஸாஹிர் அன்சாரி அவர்களும் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
கிளைகளின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொண்ட இக் கூட்டத்தில் களுத்துறைப் பிரதேசத்தின் கட்சி வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.