காத்தான்குடி தாருல் அத்தர் அத்தஅவிய்யா ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் போதை ஒழிப்பு மாநாடு



S. சஜீத்-
காத்தான்குடி தாருல் அத்தர் அத்தஅவிய்யா ஏற்பாட்டிலிலும் காத்தான்குடி நகரசபை அனுசரணையோடும் "போதையற்ற நகரைக் கட்டியெழுப்புவோம் போதைவஸ்துக்களை விட்டும் எம் சமூகத்தைப் பாதுகாப்போம்" எனும் தொணிப் பொருளில் மாபெரும் போதை ஒழிப்பு மாநாடு (01.02.2019) நேற்றையதினம் மாலை 6 மணிமுதல் இரவு 10.30 மணிவரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில் "போதையும் இறை நம்பிக்கையும்" எனும் தலைப்பினில் அஷ்ஷெய்க். அப்துல் கணி (ஹாமி) அவர்கள் மற்றும் "நெருங்கி வரும் மறுமையும் அதிகரித்துச் செல்லும் போதைப் பொருள் பாவனையும்" எனும் தலைப்பினில் அஷ்ஷெய்க். நியாஸ் ஸித்தீக் (ஸிராஜி) அவர்களும் "போதை வஸ்துக்களும் சமூக பாதிப்புக்களும்" எனும் தலைப்பனில் அஷ்ஷெய்க். முர்ஸித் (அப்பாஸி) ஆகியோர்கள் கலந்து கொண்டு இதன்போது சிறப்பு மார்க்க சொற்பொழிவாற்றினர்.
இம் மாநாட்டில் ஆண்கள், பெண்கள் உற்பட பல நூற்றுக் கணக்கானோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -