கோடாரி ஒன்றினால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி எஸ்.எஸ்.ஓ.வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய யூசூப் முகம்மட் பைரூஸ் என்பவர் நேற்று (19) ம் திகதி வாழைச்சேனை ஹைராத் வீதியில் வைத்து ஆறுபேர் கொண்ட குழுவினரால் கோடாரியினால் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞனுக்கும் தாக்கியவர்களுக்குமிடையில் சிறியதொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனை தாக்கியவர்கள் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.