நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் வாழ்வியல் மீது கரிசனை செலுத்தாது தான் தோன்றிதனமாக சிறுபான்மை மக்களின் மக்கள் பிரதிநிதிகள் செயட்படுகிறார்கள் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைபரப்பு தேசிய இணைப்பாளரும் அல் மிசான் பௌண்டசன் தவிசாளருமான அல்-ஹாஜ் நூருள் ஹுதா உமர் தெரிவித்தார்.
இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து சிறுபான்மை மக்களின் வாழ்வில் கேட்டுவிளைவிக்க அந்நியநாட்டு சக்திகளின் நிகழ்ச்சிநிரளில் இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் கொண்டுவர இருக்கும் புதிய அரசியலமைப்புக்கு தமது தலைமையிலான அமைப்பின் எதிர்ப்பை வெளியிடும் மகஜரை கையளித்தார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலக்குகளை அடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிஉச்ச காய் நகர்தல் களை இந்த அரசில் செய்துவருகிறது. அவர்களின் இலக்குகளை அடைய அவர்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைமைகள் மௌனமாக அமைச்சு சண்டை பிடிக்கிறார்கள்.
நாட்டை வறுமைப்படுத்தி, சிறுபான்மை மக்களின் இருப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த அரசியலமைப்பை மக்களின் நலன் கருதி எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.