- அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
க.கிஷாந்தன்-சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50 ரூபாய் பெற்றுக் கொடுத்தது போல் எதிர்காலத்தில் எங்களுடைய தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் ஏனையவர்களுக்கு வழங்குகின்ற மானியத்தையும் சமுர்த்தி கொடுப்பனவையும் பெற்றுக்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட உள்ள ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் (17.02.2019) அன்று அட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் இராதாகிருஷ்ணன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் இராதாகிருஷ்ணன்
அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முதல் முறையாக வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது அதற்கு காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தம் என்பதை யாரும் மறுக்க முடியாது இது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் கூட எதிர்காலத்தில் இந்த விடயத்தில் அதாவது அரசாங்கம் ஏனையவர்களுக்கு வழங்குகின்ற சமூர்த்தி கொடுப்பனவுகள் மானியங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு இது ஒரு ஆரம்பமாகவே இருக்கும் இதுவரை காலமும் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு அது தொடர்பாக எந்தவிதமான எதிர்ப்புகளும் அல்லது அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையோ நடைபெறுவது இல்லை ஆனால் இந்த முறை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து மேலதிகமாக 50 ரூபாயை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்திருக்கிறது இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதவில்லை ஆனால் இதன் ஊடாக எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து ஏனையவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற அனைத்து சலுகைகளையும் எங்களுடைய மக்களுக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது அதற்கான அழுத்தத்தையும் நாங்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்
இன்று அரசாங்கம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 187 மில்லியன் பெற்றுக் கொடுத்திருக்கிறது எங்களைப் பொறுத்த அளவில் மூன்று பேருடைய தொகை கிடைக்க இருக்கிறது அதாவது நானும் அமைச்சர் திகாம்பரம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகிய மூவருக்கும் இந்த தொகை கிடைக்க இருக்கிறது எனவே இதன் மூலமாக பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
ஒரு விடயத்தை நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் அதாவது எங்களுடைய மக்களுக்கு சேவை அதிகமாக சென்றடைய வேண்டுமாக இருந்தால் எங்களுடைய பிரதிநிதிகள் அதிகமாக பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பிரதேச சபைகளில் இருக்க வேண்டும் மிக விரைவில் நாங்கள் ஒரு மாகாண சபைத் தேர்தலை சந்திக்க இருக்கின்றோம் எனவே அந்தத் தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு வாக்களித்து அவர்களை அதிகமாக தெரிவு செய்தீர்கள் ஆனால் அவர்களின் மூலமாக அதிகமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுத்துச் செல்ல முடியும்
அனைவரும் ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும் அதாவது தேர்தல் காலங்களில் பலரும் வந்து பல பொய் பிரச்சாரங்களை செய்வார்கள் கடந்த தேர்தலிலும் அது நடைபெற்றது யானை உங்களுடைய பணத்தை முழுங்கிவிட்டது என்று சொன்னார்கள் ஆனால் இன்று அது தெளிவாக தெரிகிறது எந்த யானையும் உங்களுடைய பணத்தை முழுங்ககவில்லை என்று எனவே பொய் பிரச்சாரம் செய்கின்றவர்களுக்கு உங்களுடைய வாக்குகளை வழங்குவதன் மூலம் நீங்கள் எதனையும் சாதித்து கொள்ள முடியாது எனவே திறமையானவர்களை தகுதியானவர்களை கடந்த காலங்களில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்து வாக்களித்து உரியவர்களை தெரிவு செய்தால் நிச்சயமாக எங்களுடைய அபிவிருத்தி இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் இதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் அரசாங்கத்தோடு இருக்கின்றோம் என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எங்கள் மக்களுக்கும் எது தேவையோ எது சரி என்று படுகின்றதோ அதற்காக நாங்கள் எப்பொழுதும் குரல் கொடுக்க தயங்க மாட்டோம் அதனை கடந்த காலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்து காட்டி இருக்கின்றது.
எதிர்காலத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தாங்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதை நாம் இந்த முறை அவர்களுக்கு உணர்த்தி இருக்கின்றோம் எனவே எங்களுடைய மக்கள் தொடர்பான பிரச்சினைகளை மக்களோடு பேசி அல்லது மலையகத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என்பதை இந்த முறை கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தில் தெளிவாக தெரிகின்றது எனவே எதிர்காலத்திலும் அந்த அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி என்றும் பின்னிற்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.