பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் ..

பதிவாளர் உள்ளிட்ட இரு உத்தியோகஸ்தர்களை வெறியேற்றுமாறும் கோரிக்கை

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா-
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள் (மாணவர்கள்)வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் 06.02.2019 முதல் ஈடுபட்டு வருகின்றனர்
கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களை வெளியேற்றக்கோரியும், முறையாக சுதமான உணவு வழங்கமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே கல்லூரி வளாகத்தினுள் இவ் ஆர்பாட்டத்தை ஆரம்பித்துள்ளாக மாணவர்கள் தெரிவித்தனர்

ஸ்ரீ பாத தேசிய கல்வியிற் கல்லூரியில் சுகாதாரம் பேனப்படாது சமையல் நடவடிக்கை மேற்கொள்வதாக பயிலுனர் மாணவர்களினால் பொதுசுகாதர பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து 05.02.2019 கொட்டகலை மற்றும் தலவாக்கலை பொது சுகாதார பரிசோகர் குழு திடீர் பரிசோதணையில் ஈடுட்ட நிலையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த கல்லூரியின் சமையலரைக்கு சீல் வைத்தனர் இந் நிலையில் நேற்று இரவும் இன்று காலையும் முறையாக மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்ததுடன் நீண்ட காலமாக கடமையாற்றும கல்லூரியின் திவாளரும் சக அதிகாரிகள் இருவருமாக மூவர் நேற்று இரவு காரியாலயத்தில் மது போதை அருந்திக்கொண்டிருத்த நிலையில் மாணவர்களுக்கும் அவ் அதிகாரிகளுக்கும் முரன்பாடு ஏற்பட்டது முரன்பாட்டையடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸார் தலையிட்டு குறித்த பதிவாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுள்ளது இந் நிலையில் குறித்த பதிவாளரையும் அதிகாரிகளையும் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து வெளியேற்றும் வரையில் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர் பயிலுனர் மாணவர்கள் தெரிவித்தனர் .




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -