போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் பாவனையாளர்கள் சார்பில் நீதிமன்றில் எந்வொரு சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது



ஏ.எம்.றிகாஸ்-
போதைப்பொருள் வர்;த்தகர் மற்றும் பாவனையாளர்கள் சார்பில் நீதிமன்றில் எந்வொரு சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்ற விசேட தீர்மானம் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு மாநாடொன்று மட்டக்களப்பு- ஏறாவூர்- மிச்நகர் - பறக்கா ஜும்ஆ பள்ளிவாயலில் (21) மாலை நடைபெற்றது.
இம்மாநாட்டினையடுத்து பேரணியொன்றும் நடாத்தப்பட்டது.

பள்ளிவாயல் பிரதம இமாம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏறாவூர்-ஜம்இய்யத்து உலமா சபைத் தலைவர் நிராஸ் உஸ்வி, பொலிஸ் பெருங்குற்றப்பிரிவு அதிகாரி ஏ. நிஸார்தீன், பிரதேச சபையின் உப தவிசாளர் இராமச்சந்திரன், பிரதேச செயலகம் மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள், மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இம்மாநாட்டினையடுத்து விழிப்புணர்வுப் பேரணியொன்றும் நடைபெற்றது.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்களாவன--
 1. போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையாளர்கள் மார்க்க அறிவுரைகளுக்கிணங்கி மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளாதவிடத்து பொலிஸாருடன் இணைந்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்துதல்.
2. அவர்களிமிருந்து பள்ளிவாயலுக்கான சந்தாப்பணம் அறவிடுவதைத் தவிர்த்தல்.
3. திருமணத்திற்கான அனுமதி வழங்குவதில்லை.
4. மரணித்த பின்னர் பள்ளிவாயலினால் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதில்லை.
5. குடும்பத்தில் ஏற்படும் மரணம் மற்றும் திருமண நிகழ்வுகளில் பொதுமக்கள் கலந்துகொள்வதில்லை என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -