ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பெருமுயற்சியில் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கம்பரெலிய திட்டத்தின் கீழ் ரூபா ஒரு கோடி 35 இலட்சம் நிதியில் அமைக்கப்பட்ட பல்வேறு கொங்கிறீற்று வீதிகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கின்ற நிகழ்வுகள் நேற்று(03) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் கௌரவ அதிதியாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களும்,விஷேட அதிதிகளாக காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் Jp,ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ.வாசித் அலி,முன்னாள் நகரபிதா மர்சூக் அஹமட் லெப்பை,ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.நளீம்,எம்.ஐ.ரியாழ்,இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.சீ.எம்.சஹீட்,எம்.ஐ.எம்.நஸீர்,ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,பிரமுகர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.