மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக பயணித்த இரு இளைஞர்கள் முச்சக்கரவண்டியொன்றில் மோதுண்டு காயமடைந்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியில் இச் சம்பவம் இன்று (7) ம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது..
இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக அவ் வீதியால் பயணித்தபோது வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அதன் சாரதி கயர் ஒன்று செல்வதற்காக தயாராகி முச்சக்கரவண்டியை வீதிக்கு எடுத்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.