கடந்த பத்தொன்பதாம் திகதி, யாழ் டான் டிவி ஊடகவியலாளரை தாக்கியமைக்காக ,கைது செய்யப்பட்டிருந்த, கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி,இன்று நீதிமன்ற உத்தரவின் பெயரில் 50000ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த வழக்கு விசாரணை மார்ச் 9ம் திகதி நடைபெறும்.
கொக்குவில் கிழக்கில் இடம்பெற்ற சம்பவத்தை வீடியோ எடுக்கும் போது, அங்கு சிவில் உடையில் வந்த கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஜீ.குணரத்ன ,நெல்லியடியை சேர்ந்த ,டான் டீவீ ஊடகவியலாளர் நடராஜா குகராஜா என்பவர் மீது அச்சுறுத்தி, தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.இச்சம்பவம் கடந்த பத்தொன்பதாம் திகதி பிற்பகல் 2.30மணியளவில் இடம் பெற்றுள்ளதாக
பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.டிஐஜி ரொஷான் பெனான்டோ வினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து , கடந்த 20ம் திகதி கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்.