கொழும்பில் உள்ள கட்டாா் துாதுவரலாயம் கட்டாா் நாட்டின் தேசிய விளையாட்டு தினமான இன்று (12) கொழும்பு ரோயல் கல்லுாாியின் விளையாட்டு மைதைானத்தில் கொண்டாடியது. இந் நிகழ்வுகள் கட்டாா் நாட்டின் இலங்கைக்கான துாதுவா் கலாநிதி ரசீட் அல் பஹ்டி அல் மெஹ்ரி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது கொழும்பில் உள்ள கட்டாா் துாதுவரலாயத்தில் பணியாற்றும் சகல ஊழியா்கள் பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டனா். அத்துடன் இப் போட்டிகளில் குவைத், ஓமான், பலஸ்தின் நாட்டுகளது இலங்கையில் உள்ள துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா். 2011ஆம் ஆண்டு கட்டாா் நாட்டின் அமீா் ஒவ்வொரு வருடம் பெப்ரவரி இரண்டாம் செவ்வாய்க்கிழமையை கட்டாா் தேசிய விளையாட்டு நாளாக பிரகடப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் தினம் கட்டாா் நாடும் மற்றும் சலக கட்டாா் துாதுவரலயாங்களும் இப் விளையாட்டு தினத்தினை கொண்டாடி உடற்பயிற்சிகள் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றனா்.