2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு 2019.02.05 ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உதவிப்பதிவாளர் எஸ்.அர்சனாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல் செயினுடீன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்வின்போது உயிரியல் விஞ்ஞான பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.நஸீர் அகமட், பௌதீக விஞ்ஞான பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எப் நவாஸ்,கணிதவியல் விஞ்ஞான பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கோமதிராஜ் மற்றும் நூலகர் எம்.எம்.றிபாவுடீன் உள்ளிட்டவர்களும் ஏனைய சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்களும் கல்விசார் கல்விசார உத்தியோகத்தர்களும் புதிய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கல்வியாண்டுக்காக 225 மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் சுற்றுப்பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் விடுதிவசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்தாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.