இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்றஇலங்கை மக்களுக்கும், நாட்டின் நலன்விரும்பிகள்அனைவருக்கும் மிக மகிழ்ச்சியும், சந்தோஷமும்நிறைந்த 71 வது சுதந்திரதின வாழ்த்துக்களைத்தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
அந்நிய ஆட்சியில் இருந்து சுதந்திரத்தைபெற்றுக்கொள்வதற்கு அரும்பாடுபட்டு உழைத்த எம்தேசிய வீரர்களின் பங்களிப்புகளை நன்றியுணர்வுடன்நினைவுகூரும் நேரம் இது, அத்துடன் எங்கள்தாயகத்தை மீட்டெடுக்க தம்முடைய உயிரைஅர்ப்பணித்த வீரர்களுக்கு மரியாதைசெய்வதற்குமான நேரமும் ஆகும்.
இலஞ்சம் மற்றும் ஊழல், போதைப்பொருள்பாவனை இல்லாமலும், சட்டத்திற்கமைய பயமின்றிபாதுகாப்புடன் மக்கள் நடமாடுகின்ற நிலையிலேசுதந்திரத்தின் உண்மைத்தன்மை உணரப்படும்.
நம் நாட்டை இறையாண்மை நாடாக மாற்றுவதற்குஎமது ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேனஅவர்கள் பல நலன்புரி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
எமது ஜனாதிபதி அவர்களின் முனைப்பு போதையற்றஇலங்கையொன்றை உருவாக்குவதாகும், இதற்காகஅனைத்து வயதினரிடமிருந்தும், அனைத்து துறையினரிடமிருந்தான ஆதரவுதேவைப்படுகின்றது. ஆகவே சுதந்திரத்தை இன்னும்அர்த்தமுள்ளதாக்குவதற்காக நமது ஜனாதிபதிஅவர்களுடன் இணைந்து செயற்படுவோமாக.
எமது நாட்டில் மிகுந்த செழிப்பும், சந்தோஷமும், ஒற்றுமையுடனும்கூடிய சமாதானமான வாழ்வு என்றஇலக்கினை மக்கள் அடையும் வரை நாம்தொடர்ந்து செயற்படுவோம்.