கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த ஹரீஸ் நடவடிக்கை.

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்துவருகின்றார். அந்தவகையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை நேற்று (13) புதன்கிழமை மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இராஜாங்க அமைச்சர் சந்தித்து குறித்த பாடசாலையினை தரமுயர்த்துவதற்கான ஆளுநரின் அனுமதி பெறப்பட்டது.
அதற்கமைவாக மஃமூத் மகளிர் கல்லூரியினை தேசியபாடசாலையாக தரமுயர்த்தும் நடவடிக்கையினை விரைந்து முன்னெடுக்குமாறு ஆளுநரினால் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பில் மஃமூத் மகளிர் கல்லூரி அதிபர் யு.எல்.எம். அமீன், பிரதி அதிபர் அஸ்மி காரியப்பர் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் ஆளுநருடனான இச்சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த பாடசாலையினை தரமுயர்த்துவதற்கு தேவையான ஆவணங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
மேலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் இன்று (14) வியாழக்கிழமை குறித்த பாடசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அப்பாடசாலையினை தேசியபாடசாலையாக தரமுயர்த்துவதற்கான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கான பணிப்புரையினை ஆளுநனர் விடுத்துள்ளார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -