காத்தான்குடி மக்களால் சாதனை வீரர் மக்கீன் முஹம்மட் அலி அமோக வரவேற்பினைப் பெற்றுக்கொண்டார்.(படங்கள் இணைப்பு)

S.சஜீத்-
வுனியா, சூடுவெந்தபுலவு பிரதேசத்தைச் சேர்ந்த வயது (31) மாற்றுத்திறனாளியான மக்கீன் முஹம்மட் அலி நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் வேண்டியும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் கடந்த 01ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து நாடு பூராக 1400 கிலோ மீட்டர் சாதனை பயணத்தை ஆரம்பித்த இவர் (10.02.2019) இன்று மட்டக்களப்பு மாவட்ட, காத்தான்குடி பிரதேசத்தை பி.ப 12.00 மணியளவில் வந்தடைந்தார்.

மேற்படி இவரது பயணம் நேற்று 9வது நாள் நிறைவாக கல்முனைப்; பிரதேசத்தை வந்தடைந்தது. இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் 10வது நாள் தொடக்கப் பயணமாக கல்முனை சாஹிரா பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பம் செய்து தனது சக்கர நாற்காலியில் மிகவேகமாக பயணித்து வந்த இவர் காத்தான்குடி பிரதேசத்தை வந்தடைந்தார்.

இதன் போது மாற்றுத்திறனாளி மக்கீன் முஹம்மட் அலி அவர்களை காத்தான்குடி மக்கள் அமோக வரவேற்புக் கொடுத்து வரவேற்றனர். பூ மாலை மற்றும் பொன்னாடை என்பன போர்த்தி காத்தான்குடி ஆட்டோ சாரதி சங்கம்,வர்த்தக சங்கம் இன்னும் பல அமைப்புக்கள் இணைந்து மக்கீன் முஹம்மட் அலிக்கான இந்த ஊக்கப்படுத்தல் வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்முனையில் இருந்து ஆரம்பம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி முஹம்மட் அலியின் இன்றைய 10வது நாள் பயணமானது வாழைச்சேனை வரை செல்லவுள்ளதோடு இவர் இந்த சாதனைக்காக வேண்டி தினமும் சுமார் 120 கிலோ மீட்டர் சக்கர நாற்காலியில் பயணிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -