விளையாட்டு மற்றும் கலை போன்றவற்றில் அவர்கள் வீரர்களாக இருப்பார்கள்.ஆனால்,முழு நேர அரசியல் அந்தத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இடங்கொடுப்பதில்லை.அவ்வாறான பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர்தான் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்.
இளம் வயதில் அவர் ஒரு விளையாட்டு வீரர்.கிரிக்கட் மற்றும் உதைப்பந்தாட்டத்தில் ஹீரோவாக திகழ்ந்தவர்.நிந்தவூரில் கடின பந்து கிரிக்கட்டை அறிமுகப்படுத்தியதே அவர் சார்ந்த அணிதான்.
இதனால்தான் அவர் இன்னும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.அவரது அபிவிருத்தி நிகழ்வுகளில் விளையாட்டை ஊக்கப்படுத்தி பேசுவதற்கு அவர் தவறுவதில்லை.
ஆண்கள் மாத்திரமன்றி பெண்களும் விளையாட்டில் ஈடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் நிந்தவூரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என இரண்டாக்கப் பிரித்து பேட்மின்டன் கோர்ட் ஒன்றை நிர்மாணித்துள்ளார்.
ஆவர் விளையாட்டில் இப்படி ஈடுபாடு உடையவர்தான் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரும் அறிவர்.ஆனால்,அவர்களுக்குத் தெரியாத அவரது மற்றுமொரு திறமை பற்றித்தான் இங்கு சொல்லப் போகிறோம்.ஆம்,,அதுதான் சமையல் கலை.
அவர் சமையலும் தெரிந்த கெட்டிக்காரர்.இது வெளிப்படுத்தப்படாத திறமையாக இருந்து வந்தபோதிலும் சிரஸ தொலைகாட்சி அந்தத் திறமையை அடையாளம் கண்டு வெளியே கொண்டு வந்துவிட்டது.
ஆம்,அந்தத் தொலைகாட்சி நடத்தும் 'அரசியலும் சமையலும்' என்ற நிகழ்ச்சியின் ஊடாகவே பைசல் காசிமின் இந்தத் திறமை வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியை நீங்களும் பாருங்கள்.ப்ரமித்துப் போவீர்கள்.
''கல்யாண சமையல் சாதம்
காய் கரிகளும் ப்ரமாதம்
இந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்''