நாவிதன்வெளி மு.கா பிரமுகர்கள், ம.கா வில் இணைவு!

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று (12) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கொழும்பில் சந்தித்த அவர்கள், இனிமேல் மக்கள் காங்கிரஸில் இணைந்தே தாம் பயணிக்கவுள்ளதாக உறுதி வழங்கினர்.
நாவிதன்வெளி முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் முன்னாள் தலைவர் ஏ.எம். மஹ்ரூப், செயலாளர் இஸட். நிஜாம் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களான பீ.எம். அமீர், ஏ.ஏ இஸாக், எம்.எஸ். ஆதம்பாவா, எம்.எல்.அஸீஸ் என பலரே இன்று கட்சியில் இணைந்துகொண்டவர்களாவர். இவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாவிதன்வெளி பிரதேச முக்கியஸ்தர் ஏ.பி. மன்சூரும் இணைந்துகொண்டார்.

”முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தாங்கள் வெளியேறி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமைக்கான காரணம், தாம் அங்கம் வகித்த கட்சி தமது பிரதேசத்தை தொடர்ந்தும், புறக்கணித்தது வந்ததும், தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நாவிதன்வெளி பிரதேச மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வந்தமையுமே என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.”
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பிரதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸையே தாங்கள் நோக்குவதாகவும், கட்சி தலைமையை பலப்படுத்தப்போவதாகவும், தமது பிரதேசத்தில் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கி மேலும் சக்தியூட்டுவதற்கு எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். இனிமேல் தமது பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையின் ஒத்துழைப்புடன் தமது பிரதேசத்தை கட்டியெழுப்ப முடியுமென தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்."

இந்த நிகழ்வில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத், கட்சியின் உயர்பீட உறுப்பினர் சித்தீக் நதீர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷார்ரப் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -