அனைத்து இனத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் என்றும் நினைவுகூரவேண்டும் – ஐ.ரீ.அஸ்மி.



எச்.எம்.எம்.பர்ஸான்-
லங்கையின் 71 வது சுதந்திர தின நிகழ்வை நாங்கள் சிறப்பாகவும், சந்தோசமாகவும் கொண்டாடுகின்ற இந்நாளில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த 71 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (4) பிரதேச சபை முன்றலில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
இலங்கையின் 71 வது சுதந்திர தின நிகழ்வானது இன்று நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் இன, மத, மொழி வேறுபாடின்றி மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் நாங்கள் எல்லோரும் சுதந்திரமாகவும், எங்களை நாங்களே ஆளுகின்றவர்களாகவும், சந்தோசமாக வாழ வேண்டும்.
இந்நாளில் அனைத்து இனத்தவர்களும் ஒரே கூரையின் கீழ் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பால் நாங்கள் இலங்கையர்கள் என்ற அந்தப் போர்வையின் கீழ் வேறுபாடு இல்லாமல் வாழுகின்ற நாளாக இந்நாளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சுதந்திர நாளில் நாங்கள் வரலாறுகளை எடுத்துப் பார்க்கின்றபோது இந்த சுதந்திரத்துக்காக சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவம் போன்ற எல்லா மதத் தலைவர்களும் ஒன்று சேர்ந்துதான் இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழுவதற்கு அன்று வாழ்ந்த அரசியல் தலைவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து உயிர்களைக் கொடுத்து எங்களுக்கு பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், உதவி தவிசாளர் யூ.எல். அஹமட் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்ககள், மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்நிகழ்வுக்கு வருகைதந்த மதத் தலைவர்களுக்கு தவிசாளரினால் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -