மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் நான்காவது ஹாபிழ் பட்டமளிப்பு விழா, முதலாவது மௌலவி (நஹ்வி) பட்டமளிப்பு விழா, இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரு விழா இன்று (2) சனிக்கிழமை குறித்த அறபுக் கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். பதுறுதீன் தலைமையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முப்தி), விஷேட பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதித் தலைவரும் ஸம் ஸம் பவுன்டேசனின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எச். யூஸுப் (முப்தி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ. அபூஉபைதா (மதனி), அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஆதம்பாவா (மதனி), கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜ|Pம், பாலமுனை ஜெஸ்கா அமைப்பின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உறுப்பினருமான மௌலவி ஐ.எல்.எம். ஹாஸீம் (சூரி), மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஹூசைனுதீன் (றியாழி), ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல். சக்காப், அந்-நஹ்ழா அறபுக் கல்லூரி பொருளாளர் ஐ.எம். பரீத், செயலாளர் எப்.எம்.ஏ. அன்சார் மௌலானா (நழீமி), முகாமையாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஏ.எல். மீராமுகைதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. அன்சார் மௌலானா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். உமர் அலி, ஆகியோர் உள்ளிட்ட அறபுக் கல்லூரியின் உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு இஸ்லாமிய ஷரிஆ கற்கை நெறி மற்றும் குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ழு) ஆகியவற்றை பாடசாலைக் கல்வியுடன் இணைத்து வழங்கும் இவ் அறபுக் கல்லூரியிலிருந்த 22 ஹாபிழ்களும் 6 மௌலவிமார்களும் பட்டம் பெற்று வெளியாகினர்.
இதன்போது அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் வெள்ளிவிழா விஷேட சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
அத்தோடு, போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நஹ்ழா அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வறபுக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்றிய தனவந்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.