பாலமுனை இஷாக்-
அத்துடன் அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதனால் ஒலுவிலூருக்கு தவிசாளர் வழங்கி கெளரவித்தது போன்று பாலமுனை மண்ணுக்கு பிரதித் தவிசாளர் பதவியை வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாலமுனை ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் பாலமுனையில் பலத்த போட்டி நிலவியது.
ஆனால் அங்கு தைரியமாகக் களமிறங்கி போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். ஹனீபா அவர்களையே பிரதித் தவிசாளராக நியமிக்குமாறு பாலமுனை கட்சிப் போராளிகள் கோரிக்கை விட்டுள்ளனர்.
குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இருக்கும் உறுபினர்களில் இரண்டு அதிபர்களும் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சட்டத்தரணி ஆகியோர் இருக்கத் தக்க அவர்களுக்கு அதிகாரமின்றி ஏனையவர்கள் அதிகாரத்தைப் பெற்று பிரதேச சபையின் அபிவிருத்தி இதர நடவடிக்கைகள் பின் தள்ளப்படும் அபாயம் ஏற்படாமல் கல்விசார் துறையினருக்கு சந்தர்ப்பம் கொடுக்கும்பொருட்டு பாலமுனையைச் சேர்ந்த அதிபர் மற்றும் சட்டத்தரணியாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்,எம்.எம். ஹனீபா அவர்களையே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதுடன் சக உறுப்பினர்கள் முழு ஆதரவையும் அதிபர் ஹனீபாவுக்கு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.