ஹொரவ்பொத்தான - கிரலாகல புராதன விகாரை புகைப்படம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று (05) கெப்பித்திகொல்லாவ நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கெப்பிட்டிகொல்லாவ நீதவான் எச். கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டிற்கும் முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டிற்கு அரசு செலவாக ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் நீதவான் இன்று கட்டளையிட்டுள்ளார்.
எட்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன், சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப், குழுவினர் கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர் இதனை அடுத்து அவர்கள் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் முதலாவது குற்றச்சாட்டில் மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்த மை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.