மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று(09) கர்பலா ஆயிஷா பள்ளிவாயலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் குறித்த பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களில் கீழ் விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் அடங்கிய ஆவணங்களை சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களூடாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சமர்ப்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் உறுப்ப்பினர்களான ரஹுமதுல்லாஹ் அன்சார் ,மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மதீன் உற்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.