கட்டாரில் தொழில் புரியும் ஏறாவூர் சகோதரர்களின் இயக்கத்தில் கடந்த மூன்று வருடமாக இயங்கி வரும் EAQ அமைப்பினால்
ஏற்பாடு செய்யப்பட்ட கிறிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் கட்டாரின் தேசிய விளையாட்டு தினமன்று கட்டார் அல் வாப் திறந்த வெளியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஏறாவூரைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர், மட்டுமத்தி திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். முகம்மட் நசீர் வரவழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த நிகழ்வானது EAQ அமைப்பின் மூலம் ஏறாவூரைச் சேர்ந்த கட்டார்வாழ் தொழிலாளர்களை ஒன்றினைக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றதுடன் ஏராளமான ஏறாவூர் இளைஞர்கள் இதில் பங்குபற்றினர்.
குறித்த அமைப்பினது நோக்கம் தங்களது ஊரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நோயாளர்கள் அவர்களின் நோயைக் குணப்படுத்த தேவைப்படும் மருத்துவச் செலவுகள் மாத்திரமன்றி கல்விக்காக வறுமையைக் காரணம் காட்டி கல்வியை இழக்கும் அப்பாவி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் நோக்கமாகவும் ஏழைமக்களின் வாழ்வாதார உதவிகளுக்காகவுமே இவ்வமைப்பு உதயமாகி இதன் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பீ.எம்.ஹமீட் உட்பட அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.மாஹீர் தெரிவித்துள்ளார்.