அல்குர ஆன் மாநாட்டுத் திர்மானங்கள்


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன் மாநாடு 17.02.2019 ஞாயிற்றுக் கிழமை கொழும்பு 7 விகாரமஹாதேவி பூங்கா அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த மாநாட்டிற்காக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த மாநாட்டில் அல்குர்ஆன் பற்றி பல விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டது.

அல்குர்ஆன் அன்று சொன்ன விசயங்களை இன்றைய விஞ்ஞானங்கள் எப்படி உண்மைப் படுத்துகின்றது என்பதை எடுத்துக் காட்டும் அறிவியல் உண்மைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு மாணவர்கள் மூலம் விளக்கமும் வழங்கப்பட்டது.
மனித உடலில் உள்ள அற்புதங்களுள் அல்குரான் கூறும் அறிவுரைகளும் எனும் தோணிப்பொருளில் ஒரு கண்காட்சி அரங்கு மற்றும்
அல்குர்ஆனுக்கு எதிரான மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டும் அறிவுரை அடங்கிய கண்காட்சி அரங்கும் மக்களின் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
அவைகள் பின்வருமாறு

1.திருக்குர்ஆன் இறைவனால் முழு மனித சமுதாயத்துக்கும் பூரண வாழ்க்கைத் திட்டத்தை வகுத்து தந்து வழிகாட்டியுள்ளது. ஒவ்வொரு
முஸ்லிம்மும் அல் குர்ஆனை தம் வாழ்க்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரைக்கும்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இன்ஷா அல்லாஹ் ஓய்வின்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
2. இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கமாகும். அது தீவிரவாதத்தை வேரறுக்கிறது. இனங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும்செயல் படவும் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்தவும் அனைத்து இன மக்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இம்மாநாட்டின் மூலம் வலியுறுத்துகிறது.
3. நெருங்கிய உறவினராக இருந்த போதும் நீதியை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆன் போதிக்கிறது. எனவே அரசு எந்த மதத்தினாராக இருந்த போதும் சமநீதியை பேணுமாறும்
குற்றங்கள் நடைபெறுமிடத்து சட்ட நடவடிக்கைகளை துரித கதியிலும் தயவு தாட்சண்யமின்றியும் அமுல்படுத்துமாறும் அரசை
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசை வலியுறுத்துகிறது.

4. திருக்குர் ஆன் போதை பொருள் பாவனை, விற்பனை போன்றவற்றை வன்மையாக எதிர்க்கின்றது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் போதை பொருளுக்கு எதிராக தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் பிரச்சாரத்தை தொடர்வதுடன் போதை பொருள் விற்பனையாளர்கள் பாவனையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. முஸ்லிம் விவாக-விவாகரத்து தனியார் சட்டத்திருத்தம் சுமார் 10 வருட காலமாக இழுபறி நிலையில் உள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டதிருத்தம் எல்லா வகையிலும் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு ஏற்ப அமைந்திருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அச்சட்ட திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. புத்தளம் அறுவைக்காடு கழிவகற்றல் திட்டம் மக்களுக்கு எவ்வித பாதிப்ப்பும் ஏற்படாத வகையில் மீழ்சுழற்ச்சிக்கு உட்படுத்தி முறைப்படுத்தப்படுவதோடு அரசு அப்பிரதேச மக்களின் கோரிக்கையை விரைவாக பரிசிலனை செய்ய வேண்டும் என இன் மாநாடு அரசை வேண்டிக்கொள்கிறது.

7. பெருகிவரும் குற்றச்செயல்களை தடுக்க இஸ்லாமிய சட்டங்களே தீர்வாகும்.
போதை மற்றும் குற்றங்களுக்கும் கடும் சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
போதையில்லா நாடாக குற்றங்கள் இல்லாதொழிந்த நாடாக நமது இலங்கை ஆக்க அரசு முழு மூச்சாக செயல்பட வேண்டும். என இம் மாநாடு அரசை கேட்டுக்கொள்கிறது. இதற்கு இலங்கை வாழ் அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை மக்கள் அனைவரையும் இம்மாநாடு கோருகிறது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -