அதி கூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவருக்கு தலா ஒர் இலட்சம் ருபா

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு ஹமீத் அல் ஹூசைனியா தேசிய கல்லுாாியில் 2018ஆம் ஆண்டில் க.பொ.த. உயா் தரத்தில் அதி கூடிய பெறுபேறுகளைப் பெற்று பல்கலைகழகம் செல்லும் 3 மாணவா்களுக்கு கல்லுாாியின் பழைய மாணவா் சங்கத்தின் 80வது குழு ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒர் இலட்சம் ருபாவினை வழங்கி இம் மாணவா்களது உயா் கல்விக்கு உதவியளித்துள்ளது. மேற்படி வைபவம் கல்லுாாியில் நடைபெற்றது.
இவ் வைபவத்திற்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் கௌரவ அதிதியாக 80வது பழைய மாணவா் குழுவின் போசகா் ஹாருன் அகமட், 80வது குழுவின் தலைவா் இம்தியாஸ் பாருக், அத்துடன் சைபுல் புஹாரி, கல்லுாாி அதிபா் ரீ. அத்ஹான், பிரதி அதிபா் பத்மசிரி, பொதுச் செயலாளா் ஆர்.எம். நவ்சுடீன், கொழும்பு ஹமீத் ஹூசைனியா பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவா் பவாஸ் காதா், பழைய மாணவா் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஹிப்ரு ஜாபீா் , 80வது குருப் பஸ்மின் பாய ஆகியோா்கள் கலந்து கொண்டு பரிசில் களையும் பணப்பரிசில்களையும ்மாணவா்களக்கு வழங்கி வைத்தான்.
80 குழு வருடா வருடம் இக் கல்லுாரிய்ன கல்வி வளா்ச்சிக்கு சாதாரண தரம் உயா் தரம் புலமைப்பரிசில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளுக்கும் பாரிய பங்களிப்பினை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -