எம் கிருஸ்ணா-
காசல்ரி- வனராஜா வரையிலான பாதையை புனரமைப்பது தொடர்பில் நோர்வூட் பிரதேசசபை கவனம் செலுத்தவேண்டும் என நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்
நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த செயலமர்வு கடந்த 15 ம் திகதி சபை தலைவர் ரவி குழந்தைவேலுவின் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இருக்கும் நோட்டன் - அட்டன் பிரதான வீதி மிக முக்கியதுவம் வாய்ந்த பாதையாக கானப்படுகின்றது , அன்மையில் நோர்வூட் - அட்டன் பிரதான பாதையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் குறித்த பகுதிக்கான போகுவரத்து ஒரு மாதகாலம் முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் ,
மாற்று வழியாக காசல்ரி - நோட்டன் பாதையே பயன்படுத்தப்பட்டது அதே போல அட்டன் கொழும்பு பிரதான பாதை தடைப்படும் சந்தர்ப்பத்திலும் காசல்ரி வழியான நோட்டன் பாதையை பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றது,
ஆகவே குறித்த பாதையை காபட் பாதையாக செப்பனிட அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நோர்வூட் பிரதேச சபை பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டும் மேலும் வனராஜா -காசல்ரி வரையிலான 6 கிலோ மீட்டர் தூரம் வரையான பாதையை புனரமைப்பதில் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றது எனவே குறித்த பாதையை செப்பனிட நோர்வூட் பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்