ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை வட்டாரம் 03க்கான இளைஞர்கள் காங்கிரஸ் செயற்குழுக்கூட் டம் நேற்று (16) இரவு மருதமுனைபொது நூலக கேடப்போர் கூடத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் தலைமையில் நடைபெற்றது .இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சடடத்தரணி
ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.
இதன் பொது வட்டார குழு தெரிவு செய்யப்பட்டதுடன் இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் சினேக பூர்வ கலந்துயாடலிலும் ஈடுபாட்டார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும்மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்..ஹரீஸ் அவர்களின் வெகுசன தொடர்பு அதிகாரி எஸ்.எம்.அலிகான் அவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் ஏனைய கட்சிகளின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.