நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்ட உரிமையாளர்கள், நுரைச்சோலை கரும்புக்காணி உரிமையாளர்கள், வட்டமடுக்காணி உரிமையாளர்கள் வருகை தந்து தமது பிரச்சினைகளை இஸ்மாயில் MP அவர்களிடம் முன்வைத்திருந்தனர்.
அதர்க்குத்தேவையான ஆவணங்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டிக்கொண்டதர்க்கமைய 10-02-2019 அன்று நுரைச்சோலை கரும்புக்காணி விடயங்களுக்கான ஆவணக்கோவையானது அதன் உரிமையாளர்களினால் இஸ்மாயில் MP அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
வட்டமடுக்காணி உரிமையாளர்கள் தங்களால் வளங்கப்பட்ட ஆவணங்களிலே குறைபாடாகவுள்ள ஏனைய ஆவணங்களையும் கையளிக்க வேண்டியுள்ளது.
கௌரவ இஸ்மாயில் MP அவர்கள் கிழக்குமாகாண ஆளுனர் கௌரவ ஹிஸ்புல்லா அவர்களிடம் இந்த நிலப்பிரச்சினைகளை தீர்த்துத்தர வேண்டிக்கொண்டதற்க்கு அமைய, இம்மாதம் 16-02-2019 ம் திகதி தம்மிடம் இந்த நில விடயங்கள் சம்பந்தப்பட்ட சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார்.
எனவே, வட்டமடுக்காணி உரிமையாளர்கள், தமது மிகுதி ஆவணங்களை கௌரவ இஸ்மாயில் MP. யின் விசேட ஆலோசகரான தொழில் அதிபர் அப்துல் பாசித் அப்துல் சமட் JP. அவர்களிடம் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் செலுத்துமாறு மிகவும் வினயமாக வேண்டப்படுகின்றனர்.
இத்தகவலை அறிந்தவர்கள் சம்மந்தப்பட்வர்களிடம் சேர்த்துவிடுவதும் நன்மையான காரியமே. மேற்சொன்ன விடங்களை வைத்து.
நான் செய்தது, அவர்செய்தது, இவர் செய்தது என்ற பலப்பரீட்சைக்கு தயவு செய்து எவரும் தயாராகாமல்,எவர் செய்தாவது நமது சமூகத்தினுடைய தீர்க்கப்படாத பிரச்சினைகளை எவ்வாறாவது தீர்து வைக்க வேண்டும் என்ற பரந்த நோக்குடன் சிந்தித்து செயலாற்றவே இத்தகவல் கிடைக்கப்பெற்றோர் வேண்டப்படுகின்றனர்...
சமூக நலன் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எவர்மீதும், அரசியல் சாயம் பூசி அவர்களின் முயற்சிகளை வீணாக விமர்சிப்பதனை கைவிட்டு விட்டு, நல்லது நடக்க உதவி செய்வது நல்லது.
உபத்திரவம் செய்யாதிருப்பது மிகவும் நல்லது.