2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
"இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.
ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக அவற்றை பயன்படுத்துவதும் அவசியம்.
தங்கள் சுயலநலன்களிற்காக செயற்பட்ட சிலரால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது.
1980களில் இந்தியாவில் பாதுகாப்பு பெற்ற விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் உயிரை பறித்ததுடன் 1500 படையினரை கொலை செய்தனர்.
அது எங்கள் உறவுகளில் பிரச்சினைக்குரிய காலம் நாங்கள் இழைத்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதுடன் அதே தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.
1980 மற்றும் 2014 இல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன.
உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போரிட்டுக்கொண்டிருந்தபோது கூட இந்தியாவுடன் சினேகபூர்வமான உறவுகள் காணப்பட்டன பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.
2014 இல் மீண்டும் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய முறிவு ஏற்பட்டது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அரசாங்கங்களிற்கு இடையிலான உறவுகள் மாற்றமடைந்தன. அரசாங்கங்கள் மத்தியில் போதிய தொடர்பாடல் இல்லாததே இதற்கு காரணம். இந்திய இலங்கை உறவுகளிற்கான எனது பரிந்துரை இதுதான்.
ஆட்சியிலிருந்து விலகும் தரப்பு இலங்கையுடனான உறவுகளிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பும் அதே அங்கீகாரத்தைவழங்கவேண்டும்." என்றார் மஹிந்த.
இதேவேளை பெங்களூரு சென்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.ஐபிசி